திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சிக்கு உட்பட அரசு பள்ளியில், 20 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த தேக்கு மரங்களை அடியோடு வெட்டி விற்பனை செய்ய முயன்ற பள்ளி உதவி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வெங்காயவேலூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 21 தேக்கு மரங்கள் மாணவர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்து வந்த கண்ணன் கடந்த 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான்று, கூலி ஆட்களை வைத்து தேக்கு மரங்களை அடியோடு வெட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டதில், குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் ஆரோக்கியசாமி உத்தரவிட்டார்.