தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசம், இரத்மலானை, கொழும்பு 05, கொழும்பு 06, பத்தரமுல்லை, உடுமுல்ல, ஹிம்புட்டான ஆகிய பிரதேசங்களில் நேற்றிரவு (19) முதல் நீர் விநியோகம் தடைப்பட்டது.
கொழும்பு 4ல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது. நீர்க் குழாயில் திடீரென ஏற்பட்ட பாதிப்பினாலேயே நீர் விநியோகம் தடைக்கப்பட்டிருந்தது.
எனினும், நீர் விநியோகச் செயற்பாடுகள் தற்போது வழமை நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.