எது குடும்பப்படம்? – ஆர்ஜே பாலாஜி கிண்டல்
ரேடியோவில் ஆர்ஜேவாக இருந்து, சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடிக்க வந்து, நாயகனாக மாறி இயக்குனராகவும் வெற்றி பெற்றவர் ஆர்ஜே பாலாஜி. 'மூக்குத்தி அம்மன்' படத்திற்குப் பிறகு 'வீட்ல விசேஷம்' படத்தை சரவணன் உடன் இணைந்து இயக்கியிருக்கிறார்.
ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா மற்றும் பலர் நடித்து 2018ல் வெளிவந்த 'பதாய் ஹோ' ஹிந்திப் படத்தின் தமிழ் ரீமேக்தான் இந்த 'வீட்ல விசேஷம்'. ஆர்ஜே பாலாஜி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படம் ஜுன் 17ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் வெளியீடு பற்றி நேற்று பதிவிட்டிருந்தார் பாலாஜி. அதற்கு ஒரு ரசிகர் “சர்ச்சைக்குரிய கதை. தமிழகத்தில் படத்திற்கு எப்படி ரியாக்ட் செய்வார்கள் என்று தெரியவில்லை,” என்று கமெண்ட் போட்டிருந்தார்.
அந்த கமெண்ட்டிற்கு பாலாஜி, “ஆமா, பேமிலில ஒருத்தங்க பிரக்னன்ட் ஆனா மாறி படம் எடுத்தார் சர்ச்சைக்குரிய கதை. ஆனா, ஹீரோ ரவுடி, டான், கொலைகாரன், திருடன், கடத்தல்காரரா ஆ நடிச்சா பேமிலி சப்ஜெக்ட் படம்” என்று அதற்கு கிண்டலாக பதிலளித்திருந்தார்.
பாலாஜி எந்தெந்த படங்களைப் பற்றி இப்படி கிண்டலடித்துள்ளார் என்று பல்வேறு ரசிகர்களும் பல படங்களைப் பற்றிக் குறிப்பிட்டு கமெண்ட் போட்டு வருகிறார்கள்.