தந்தை கடன் வாங்கியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகன் பார்த்த சாரதி அங்குள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்த நிலையில், படிக்க சென்ல்வதால சென்ற அவர் அறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்தனர்.
அவரின் அறைக்கு சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவரது தந்தை 5 லட்சம் ரூபாய் வரை கடன்வாங்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.