”தமிழக பட்ஜெட்டை ஒட்டு மொத்த இந்தியத் தலைவர்களும் பாராட்டுகிறார்கள்” – உதயநிதி

”தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை இந்தியாவின் ஒட்டுமொத்த தலைவர்களும் பாரட்டுகின்றனர்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
மதுரை ஆனையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலையினை திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஷ், மெய்யனாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் 8 1/4 அடி உயரத்துக்கு வெங்கல சிலை திறக்கப்பட்டது.
image
திறப்பு விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மதுரை என்றாலே அன்பு பாசமும் நிறைந்தது. தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றிதான். நேற்று அறிவிக்கபட்ட நிதி நிலை அறிக்கையை இந்தியாவின் ஒட்டுமொத்த தலைவர்களும் பாரட்டுகின்றனர். தமிழக பட்ஜெட்டை ஒட்டுமொத்த இந்தியாவே பாராட்டுகிறது.
இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வராக தமிழக முதல்வர் செயல்படுகிறார். மக்கள் திமுக ஆட்சி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள். உள்ளாட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்க்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் எந்தவித தவறும் செய்யாமல் பணியாற்ற வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் ” என்று பேசினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.