தினமலர், தந்தி தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் ஊடகவியாளராக பணிபுரிந்தவர் ரங்கராஜ் பாண்டே. இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவில்லிபுத்தூரில் பிறந்தார். இவரது பெற்றோர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள்.
தமிழ்வழி அரசுப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த ரங்கராஜ், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, தினமலர் நாளிதழில் பணிக்கு சேர்ந்தார்.
தந்தித் தொலைக்காட்சியில் பணியாற்றிய பாண்டே, ஆயுத எழுத்து எனும் சிறப்பு நிகழ்ச்சி, கேள்விக்கென்ன பதில் எனும் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பெரிதும் கவனம் ஈர்த்தார். பின்னர் தந்தி தொலைக்காட்சியில் தலைமை செய்தி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
தற்போது அவர் நடத்திவரும் சாணக்யா என்ற யூடியூப் சேனல் மூன்றாம் ஆண்டில் கால் பாதிக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அதில்,
“மூன்றாம் ஆண்டு விழா காணும் என் இனிய நண்பர் ரெங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் சேனலுக்கு வாழ்த்துகள். இன்னும் பெரிய உயரங்களை இந்த ஊடக நிறுவனம் எட்டிப்பிடித்திட வாழ்த்துகிறேன்” என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மூன்றாம் ஆண்டு விழா காணும் என் இனிய நண்பர் திரு.ரெங்கராஜ் பாண்டேவின் சாணக்யா யூடியூப் சேனலுக்கு வாழ்த்துகள். இன்னும் பெரிய உயரங்களை இந்த ஊடக நிறுவனம் எட்டிப்பிடித்திட வாழ்த்துகிறேன். @ChanakyaaTv
— TTV Dhinakaran (@TTVDhinakaran) March 19, 2022