புதுடில்லி-சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 வகுப்பு மாணவர்களின் முதல் பருவத் தேர்வு முடிவுகளை, பள்ளிகளுடன் சி.பி.எஸ்.இ., நிர்வாகம் பகிர்ந்துள்ளது.கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில், சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் சில மாற்றங்களை கொண்டு வந்தது.
இதன்படி, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொது தேர்வுக்குப் பதில், இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களுக்கான முதல் பருவ தேர்வுகள், கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடந்தன.கடந்த வாரம், 10ம் வகுப்பு மாணவர்களின் முதல் பருவத் தேர்வு முடிவுகள், பள்ளிகளுடன் பகிரப்பட்டன.
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு முடிவுகளையும் சி.பி.எஸ்.இ., நிர்வாகம் பகிர்ந்துள்ளது. இதுகுறித்த தகவலை, சி.பி.எஸ்.இ., செய்தி தொடர்பாளர் ராம் சர்மா நேற்று வெளியிட்டார்.வரும் ஏப்ரல் 26ல், பிளஸ் 2 மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
Advertisement