திருமலை: திருப்பதி பத்மாவதி விருந்தினர் மாளிகையில் சுபகிருது வருட தெலுங்கில் அச்சிடப்பட்ட பஞ்சாங்கத்தை தலைமை செயல் அதிகாரி ஜவகர் வெளியிட்டார். அவர் பேசுகையில், ‘‘தேவஸ்தானத்தின் தர்மபிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்தாண்டு பக்தர்களுக்கு சுபகிருது வருட பஞ்சாங்கம் தயார் செய்யப்பட்டுள்ளது. ₹75 மதிப்புள்ள பஞ்சாங்கம் திருமலை மற்றும் திருப்பதியில் பக்தர்களுக்கு கிடைக்கும். மார்ச் கடைசி வாரத்தில் இருந்து நாடு முழுவதும் தேவஸ்தான தகவல் மையங்களிலும் பஞ்சாங்கம் கிடைக்கும்’’ என்றார்.