கேரள திரைப்பட விழாவில் பாவனாவுக்கு மாஸ் வரவேற்பு
கேரள சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த விழாவில் நடிகை பாவனா கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அதற்கு முன்னதாக அவரை வீரப்பெண்மணி என பலரும் பாராட்டினார்கள். பாவனாவின் பெயரை கூறியதும் அரங்கத்தில் இருந்தோர் எழுந்து நின்று ஒருநிமிடம் வரை கைதட்டல் செய்து தங்களது ஆதரவை அவருக்கு தெரியப்படுத்தினர்.
கடந்த 5 வருடங்களுக்கு முன்பாக நடிகை பாவனாவுக்கு அவரது வாழ்வில் விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக சட்டத்தின் மூலம் போராடி வருகிறார். அதேசமயம் கடந்த நான்கு வருடங்களில் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத பாவனா அரசு அழைப்பை ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவரது இந்த வருகையை ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகின்றனர்.