அரிசி, உளுந்து ஊற வைத்து அரைக்க வேண்டாம்: 15 நிமிடத்தில் டேஸ்டி மெதுவடை ரெடி

instant rava vada recipe in tamil: பலகார வகைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது மெதுவடை. இவற்றுடன் சேர்த்து கொடுக்கும் சட்னி வேற லெவல் டேஸ்டாக இருக்கும். தவிர, மொறுமொறுப்பாக இருக்கும் இந்த மெதுவடையை சில சமயங்களில் எந்தவித சைடிஷ் இல்லாமலேயே ருசிக்கலாம்.

இந்த டேஸ்டி மெதுவடையில் பல வகைகள் உள்ளன. மேலும் இவை பல விதமாகவும் தயார் செய்யப்படுகின்றன. நாம் இன்று பார்க்க உள்ள செய்முறை மிகவும் சுலபமான ஒன்றாகும். இந்த செய்முறைக்கு அரிசி, உளுந்து என எதையும் ஊற வைத்து அரைக்க தேவையில்லை. வெறும் 15 நிமிடங்கள் போதும்.

இன்ஸ்டன்ட் ரவா மெதுவடை

இன்ஸ்டன்ட் ரவா மெதுவடை செய்யத் தேவையான பொருட்கள்:

ரவை – 2 கப்
தயிர் – 1 1/2 கப்
உப்பு
கொத்தமல்லி தழை – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது
குக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்

இன்ஸ்டன்ட் ரவா மெதுவடை

இன்ஸ்டன்ட் ரவா மெதுவடை சிம்பிள் செய்முறை:

முதலில் ஒரு அகலமான பாத்திரம் எடுத்து அதில் இரண்டு கப் ரவை சேர்த்துக்கொள்ளவும்.

பிறகு அதனுடன் 1 கப் தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். சரியான பதம் வரவில்லை என்றால் இன்னும் ஒரு அரை கப் தயிர் சேர்த்துக்கொள்ளலாம்.

இவை இரண்டையும் நன்றாக மிக்ஸ் செய்த பிறகு, அலுமினிய பேப்பர் அல்லது ஒரு மூடியால் நன்கு மூடிக்கொள்ளவும்.

இவற்றை 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும்.

இதன்பின்னர் அவற்றுடன் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், குக்கிங் சோடா ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

மாவை வடை பதத்திற்கு தட்டி சேர்த்த பின்னர், எப்போதும் வடைக்கு மாவு பிடிப்பது போல் பிடித்து, தட்டி கொதிக்க வைத்துள்ள எண்ணெயில் இட்டு பொரித்து எடுக்கவும்.

இதேபோன்று மீதமுள்ள மாவிலும் செய்து பொரித்து எடுக்கவும்.

இப்போது நீங்கள் எதிர்பார்த்த ரவா மெதுவடை தயாராக இருக்கும். இவற்றுடன் உங்களுக்கு பிடித்த சட்னிகளுடன் சேர்த்து ருசித்து மகிழவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.