விஜய் இந்த இயக்குனருடன் இணையாததற்கு இதுதான் காரணமா ? சேர்ந்திருந்த செமயா இருந்திருக்குமே..!

நடிகர் விஜய்யை வைத்து ஒரு படமாவது எடுத்துவிடமேண்டுமென பல இயக்குனர்கள் தவம் இருக்கின்றனர். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான திகழும்
விஜய்
தன் படங்களின் வசூலின் மூலம் பல சாதனைகளை படைத்துவருகின்றார்.

சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விஜய்க்கு வயது வித்தியாசமின்றி ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் வசூலுக்கு எந்த பாதிப்பும் வராது. அதன் காரணமாகவே விஜய்யை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இது என்ன ஜாலியோ ஜிம்கானாக்கு வந்த சோதனை.. வெளியான தகவலால் ஷாக்கான ரசிகர்கள்..!

ஏனென்றால் விஜய்யின் படங்கள் அனைத்தும் கமர்ஷியல் படங்களாக உருவாவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள். அதன் காரணமாகவே விஜய்யின் படங்கள் வசூலில் சக்கைபோடு போடும். எனவே கமர்ஷியல் இயக்குனர்கள் பலரும் விஜய்யை வைத்து படம் இயக்கி வெற்றிகண்டுள்ளனர்.

ஆனால் கமர்ஷியல் காமெடி படங்கள் இயக்குவதில் வல்லவரான சுந்தர் சி படத்தில் இதுவரை விஜய் நடித்ததே இல்லை. அதற்கு காரணம் என்னவென்றால் விஜய் எப்போதும் தான் நடக்கும் படங்களின் கதையை முழுசாக இயக்குனர்களிடம் கேட்பாராம்.

விஜய்

ஒரு படம் எப்படி நகருமோ அதுபோலவே இயக்குனர்கள் தங்கள் கதையை விஜய்யிடம் மூன்று மணிநேரம் திரைக்கதையுடன் சொல்வார்களாம். ஆனால் சுந்தர் சி அதைபோல் கதைசொல்ல மாட்டாராம். எனவே
கார்த்திக்
நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற உள்ளத்தை அள்ளித்தா படத்தில் விஜய்யைத்தான் நடிக்க வைக்க நினைத்தாராம் சுந்தர் சி.

இந்நிலையில் விஜய்யிடம் உள்ளத்தை அள்ளித்தா படத்தின் ஒருவரிக்கதையை சொல்லியிருக்கின்றார் சுந்தர் சி. விஜய்க்கும் அக்கதை மிகவும் பிடித்துவிட்டது. இருப்பினும் விஜய் படத்தின் முழுக்கதையையும் சொல்லும்படி கேட்டுள்ளார். ஆனால் சுந்தர் சிக்கு அந்த பழக்கம் இல்லாததால் விஜய் அப்படத்தில் நடிக்கமுடியாமல் போனது.

சுந்தர் சி

இதன் காரணமாகத்தான் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற முடியாமல் போனது. இருப்பினும் சுந்தர் சி இயக்கத்தில் விஜய் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதே ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Vijay Carக்கு Insurance இருக்கு.. சர்ச்சைக்கு ஆதாரத்துடன் முற்றுப்புள்ளி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.