யார் பரிகாரம் செய்ய வேண்டும்?| Dinamalar

நிழல் கிரகங்களான ராகு, கேதுவுக்கு உருவம் கிடையாது. சூரியன், சந்திரனின் சுற்றுப் பாதையில் இவர்கள் சந்திக்கும் இரு புள்ளிகள் ராகு, கேது எனப்படுகிறது. வலமிருந்து இடமாகச் சுற்றும் இவர்கள், ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டு தங்கியிருப்பர். நேர் எதிர் ராசியில் நிற்கும் இந்த கிரகங்கள் ஒரே நாளில் பெயர்ச்சியாவர். தற்போது ரிஷப ராசியில் இருக்கும் ராகு மேஷத்திற்கும், விருச்சிக ராசியில் இருக்கும் கேது துலாமிற்கும் 2022 மார்ச் 21ல் மதியம் 3:13 மணிக்கு பெயர்ச்சியாகின்றனர். 2023 அக்.8 வரை இங்கு தங்கியிருப்பர்.

பலன் கணிக்கும் போது மற்ற கிரகங்களின் நிலையைக் கணக்கில் கொள்ள வேண்டும். அந்த வகையில் அடுத்த ராகு, கேது பெயர்ச்சி ஏற்படுவதற்குள் குருபகவான் இருமுறையும், சனிபகவான் ஒருமுறையும் பெயர்ச்சியடைகின்றனர். இதில் சுமாரான பலன் இடம் பெற்று இருந்தாலும் ஜாதகத்தில் நல்ல தசா, புத்தி நடப்பில் இருந்தால் பாதிப்பு குறையும்.

latest tamil news

உங்களுக்கான பலன் அறிய கிளிக் செய்யவும் https://temple.dinamalar.com/rasi_palan.php?cat=475

ராகு


அதிதேவதை : துர்கை, காளி
பிரத்யதி தேவதை: நாகம்
நிறம்: கருமை
வாகனம்: சிம்மம்
தானியம்: உளுந்து
மலர்: மந்தாரை
ரத்தினம்: கோமேதகம்
வஸ்திரம்: நீலம்
நைவேத்யம்: உளுந்துப்பொடி சாதம்
நட்பு வீடு: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்
பகை வீடு: கடகம், சிம்மம்
ராசியில் தங்கும் காலம்: 11/2 ஆண்டு

கேது


அதிதேவதை: விநாயகர், சித்ரகுப்தர்
பிரத்யதி தேவதை: பிரம்மா
நிறம்: பல வண்ணம்
வாகனம்: கழுகு
தானியம்: கொள்ளு
மலர்: செவ்வல்லி
ரத்தினம்: வைடூர்யம்
வஸ்திரம்: பல வண்ண ஆடை
நைவேத்யம்: கொள்ளுப்பொடி சாதம்
நட்பு வீடு: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்
பகை வீடு: கடகம், சிம்மம்
ராசியில் தங்கும் காலம்: 11/2 ஆண்டு

ராகு – பாடல்


பனியென உருவமாகி பட்சமாய் அமுது உண்டு
தணியென உயிர்கட்கெல்லாம் தகும்படி யோகம் போகம்
துணிவுடன் அளித்து நாளும் துலங்கிட இன்பம் நல்கும்
மணமுறும் இராகு பொற்றாள் மலரடி சென்னி வைப்பாம்

கேது – பாடல்


சித்திர வண்ணமே திருந்து மேனியும்
அத்துவசம் பொருமணி கொள் காட்சியும்
புத்தொளி மணிமுடிப் பொலிவும் கொண்டருள்
வைத்தமர் கேதுவை வணக்கம் செய்குவாம்.

ராகு – ஸ்லோகம்


அர்த்த காயம் மகா வீர்யம்
சந்திராத்ய விமர்தநம்
சிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராகும் ப்ரணமாம்யஹம்

பாதி உடலைக் கொண்டவரே! சந்திர, சூரியர்களை கிரகண வேளையில் பிடிப்பவரே! அசுரப் பெண்ணான சிம்ஹிகையின் வயிற்றில் வந்தவரே! ராகுபகவானே! உம்மை வணங்குகிறேன்.

கேது – ஸ்லோகம்


பலாஸ புஷ்ப ஸங்காஸம்
தாரகா கிரக மஸ்தகம்
ரௌத்ரம் ரௌத்ராத் மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்
புரச மரத்தின் பூவைப் போல சிவந்த நிறம் கொண்டவரே! நட்சத்திரம், கிரகங்களில் தலைமையாக விளங்குபவரே! கோபமே வடிவானவரே! பயங்கரமானவரே! உம்மைச் சரணடைகிறேன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.