உக்ரைன் மக்களுக்கு அளிப்பதற்கான கோதுமை மக்காச்சோளம் போன்ற உணவு தானியங்கள் வரும் 2023ம் ஆண்டு வரை கையிருப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை தொடங்கி அந்த நாட்டின் முக்கிய நகரங்கள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள் என பலவற்றின் மீது கடுமையான தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்திவருகின்றனர்.
இதனிடையே, ரஷ்யாவின் போர்த்தாக்குதலை கருத்தில் கொண்டு உக்ரைன் மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் விதமாக நாட்டில் விளையும் கோதுமை, பார்லி போன்ற அனைத்து உணவு பொருள்களையும் ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
#Ukraine is provided with food until the end of 2023.
The deputy head of the presidential office, Rostislav Shurma, said: “Today there are enough reserves of wheat, corn, sunflower oil and basic products in warehouses for 3-5 years. We will definitely feed ourselves”. pic.twitter.com/1kMZNhRozI
— NEXTA (@nexta_tv) March 20, 2022
இந்த நிலையில், உக்ரைன் மக்களுக்கு வழங்குவதற்காக கோதுமை, மக்காச்சோளம் போன்ற உணவு தானிய கையிருப்பு வரும் 2023 இதுவரை தாராளமாக இருக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் ரோஸ்டிஸ்லாவ் ஷுர்மா பேசுகையில், 3 முதல் 5 ஆண்டுகளுக்கு தேவையான கோதுமை, மக்காச்சோளம், சூரியகாந்தி எண்ணெய் உட்பட பல்வேறு அத்தியாவசிய உணவு பொருட்கள் உக்ரைனின் கிடங்குகளில் இருப்பதாகவும், எங்களுக்கு(உக்ரைனியர்களுக்கு) நாங்களே உணவளித்து கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி தொழிற்சாலையை அழித்துள்ள ரஷ்யா: தாக்குதல் வீடியோ காட்சிகள்