கடந்த நான்கு வருடங்களாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தலைநகரான சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் நாள்தோறும் வாடிக்கையாகவே மாறி இருந்தது.
இதன் காரணமாக சென்னை முழுவதும் ‘மூன்றாம் கண்’ சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தற்போது இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் குறைந்துள்ளன.
அதே சமயத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத பகுதிகளில் செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்துவந்தது.
இந்நிலையில், சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் ‘மிஸ்டர் இந்தியா’ பட்டம் வென்ற இளைஞர் முகமது பாசில், செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு இளையோருக்கான மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற, பி.டெக் பட்டதாரியான முகமது பாசில், செயின் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியாகியுள்ள வலிமை உள்ளிட்ட தமிழ் திரைப்படங்கள் கூட, இளைஞர்களை மூளை சலவை செய்து, ஆசை வார்த்தை கூறி செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மிஸ்டர் இந்தியா பட்டம் வென்ற இளைஞர் ஒருவர் செயின் பறிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.