புதுடெல்லி: இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 181.21 கோடியைக் கடந்தது
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை (26,240) மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.06% ஆக உள்ளனர்.
இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைவோர் விகிதம் 98.74 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,196 நோயாளிகள் குணமடைந்ததையடுத்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை (பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து) 4,24,65,122 ஆக உள்ளது.
குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,761 புதிய நோயாளிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 4,31,973 கோவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை சுமார் 78.26 கோடி கோவிட் பரிசோதனைகள் (78,26,60,658) செய்யப்பட்டுள்ளன. வாராந்திரத் தொற்று 0.41 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.41 சதவீதமாக பதிவாகியுள்ளது.
நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 181.21 கோடியைக் (1,81,21,11,675) கடந்தது. 2,13,75,059 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.