1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாக்ஸ் ஆஃபிஸில் தரமான வசூலை ஈட்டி வருகிறது. இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு பிரபலங்கள் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் யூடியூபர் ஒருவர் சினிமா டிக்கெட் வாங்க முடியாதவர்களுக்காக ஒரு காட்சிக்கான அனைத்து டிக்கெட்டுகளையும் தனது சொந்த நிதியில் வாங்கியுள்ளார். அதோடு அனைவரும் அந்த காட்சியை வந்து பார்க்கலாம் என சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்துள்ளார் அவர்.
இந்த ஏற்பாட்டை செய்தது யூடியூபர் கௌரவ் தனேஜா என தெரிகிறது. அவர் Flying Beast என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks @flyingbeast320 for your social service. https://t.co/4btVgM9GLI
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) March 20, 2022
கடந்த 17-ஆம் தேதியன்று டெல்லி ஜானக்புரியில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தின் மதியம் 1 மணி காட்சியை அவர் ஏற்பாடு செய்திருந்தார். அதனை பலரும் வந்து பார்த்து சென்றுள்ளனர். இதை அறிந்த திரைப்படத்தின் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.