இம்பால்: மணிப்பூர் மாநிலம் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக பைரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து மணிப்பூர் ஆளுநர் இல.கணேசனை சந்தித்து பைரேன் சிங் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மேலிட பார்வையாளர்களாக ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் , கிரெண் ரிஜ்ஜு ஆகியோர் பங்கேற்றனர்.
