கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது நல்ல ஏற்ற இறக்கத்தினை கண்ட நிலையில், டாப் 10 நிறுவனகளின் சந்தை மூலதன மதிப்பானது, 2,71,184.67 கோடி ரூபாய் அதிரித்துள்ளது.
இதில் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், இரண்டாவது இடத்தில் டிசிஎஸ் நிறுவனமும் உள்ளது.
இதற்கிடையில் 30 நிறுவனங்களை கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீடு 2313.63 புள்ளிகள் அல்லது 4.16% அதிகரித்தும், நிஃப்டி 3.95% அதிகரித்தும் காணப்பட்டது.
டீசல் விலை ரூ.25 அதிகரிப்பு.. யாருக்கெல்லாம் விலை அதிகரிப்பு தெரியுமா?

டாப் 10 நிறுவனங்கள்
இந்த டாப் 10 நிறுவனங்களில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இன்ஃபோசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் உள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 54,904.27 கோடி ரூபாய் அதிகரித்து, 16,77,447.33 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 3.26% அதிகரித்து, 2,481.70 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

டிசிஎஸ்
இதே போல டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 27,557.93 கோடி ரூபாய் அதிகரித்து, 13,59,475.36 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 0.46% அதிகரித்து, 3672.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

இன்ஃபோசிஸ்
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 13,501.05 கோடி ரூபாய் அதிகரித்து, 7,79,948.32 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.84% குறைந்து, 1854.60 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி-யின் சந்தை மூலதனம் 46,283.99 கோடி ரூபாய் அதிகரித்து, 8,20,747.17 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 2.20% அதிகரித்து, 1480.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சந்தை மூலதனம் 27,978.65 கோடி ரூபாய் அதிகரி4,47,792.38 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.86% அதிகரித்து, 501.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மூலதனம் 29,127.31 கோடி ரூபாய் அதிகரித்து, 5,00,174.83 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கியின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.71% அதிகரித்து, 720.10 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹிந்துஸ்தான் யூனிலீவர்
இதே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது, 1703.45 கோடி ரூபாய் அதிகரித்து, 4,93,907.58 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் பங்கு விலை 1.44% அதிகரித்து, 2102.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பஜாஜ் பைனான்ஸ்
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது, 22,311.87 கோடி ரூபாய் அதிகரித்து, 4,22,325.91 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 2.25% அதிகரித்து, 6994.40 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி
இதே ஹெச்.டி.எஃப்.சி-யின் சந்தை மூலதனம் 33,438.47 கோடி ரூபாய் அதிகரித்து, 4,37,859.67 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹெச்.டி.எஃப்.சி வங்கி நிறுவனத்தின் பங்கு விலையானது கடந்த அமர்வில் 2.20% அதிகரித்து, 1480.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

பார்தி ஏர்டெல்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சந்தை மூலதனமானது 15,377.68 கோடி ரூபாய் அதிகரித்து,3,96,963.73 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்கு விலையானது, கடந்த அமர்வில் 1.53% அதிகரித்து, 722.90 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
Top 10 firms gain Rs.2.72 lakh crore crore in market capitalization, again RIL top gainer
Top 10 firms gain Rs.2.72 lakh crore crore in market capitalization, again RIL top gainer/ முதலீட்டாளர்களுக்கு செம லாபம்.. ஒரே வாரத்தில் ரூ.2.72 லட்சம் கோடி லாபம்.. வழக்கம்போல RIL தான்..!