பிரபல சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'வித்யா நம்பர் 1' தொடர் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் இனியன் மற்றும் தேஜஸ்வினி கவுடா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், ஹீரோ இனியனுக்கு சமீபத்தில் ஏற்பட்ட விபத்தில், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே, அவர் சிறிதுகாலம் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகுகிறார். அவருக்கு பதிலாக புவியரசு இனி சஞ்சய் கேரக்டரில் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புவியரசு நடித்த காட்சிகள் நாளை முதல் ஒளிபரப்பாகும் என தெரியவருகிறது.
புவியரசு முன்னதாக ஜீ தமிழில் ஒளிபரப்பான 'அழகிய தமிழ் மகள்', 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி' ஆகிய தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.