மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் திறந்த வெளியில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை சிறுத்தை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Chinchlakhaire கிராமத்தைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர் தனது வீட்டின் கதவை தாளிடாமல் அதன் அருகே தூங்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நடுஇரவில் வந்த சிறுத்தை ஒன்று கழுத்து பகுதியில் தாக்கி அவரை இழுத்துச் சென்றது. அதிகாலையில், தண்ணீர் எடுக்க வந்த பெண்கள் அளித்த தகவலின் பேரில், விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
கண்காணிப்பு கேமிராக்களை பயன்படுத்தி சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து, கூண்டுவைத்து பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.