உக்ரைனுக்கான தேயிலை ஏற்றுமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா நெருக்கடி முடிவுக்கு வரும் வரை மீண்டும் தேயிலை ஏற்றுமதி செய்ய முடியாது என சபையின் பணிப்பாளர் நாயகம் அனுர சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையின் அளவு சுமார் 4 மில்லியன் கிலோகிராம் ஆகும்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியும் சற்று குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ரஷ்யாவிற்கு தேயிலை ஏற்றுமதி செய்வதற்கான மாற்று வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாக சிறிவர்தன மேலும் தெரிவித்தார்.