கிழக்கு உக்ரைனில் பல நகரங்களில் ரஷ்யப் படைகள் முற்றுகை – பிரிட்டன் உளவுத்துறை அறிக்கை

கிழக்கு உக்ரைனில் பல நகரங்களை ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகத்தின் உளவுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒருவாரத்தில் ரஷ்யப் படைகள் ஓரளவே முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அந்த நகரங்களின் மீது சரமாரியாகக் குண்டுவீசித் தாக்குதல் நடத்தி வருவதன் விளைவாக அங்குப் பேரழிவும், பெருமளவில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இதனிடையே ரஷ்யத் தாக்குதலில் 115 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 140க்கு மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.