கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி:
நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளின் படி, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைகிறது. 
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்பு விழா வரும் 25ம் தேதி நடைபெறுகிறது. மணிப்பூர் மாநில முதலமைச்சராக பிரேன் சிங்,  பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  
இந்நிலையில் கோவா மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் அக்கட்சியின் உயர் மட்ட தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் அமையும் பாஜக அரசு குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரின் அதிகாரப் பூர்வ இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரிகள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், பாஜக பொதுச் செயலாளர்  பி.எல்.சந்தோஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.