முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணைக்காக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் முதல்முறையாக நாளை ஆஜராகவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை 90 விழுக்காடு முடிவடைந்து, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அதன்படி 21ஆம் தேதி அவரை நேரில் ஆஜராகும்படி கடந்த வாரம் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது.
எனவே நாளை ஓபிஎஸ் ஆறுமுகசாமி ஆணையத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் நாளை விசாரணைக்கு ஆஜராவதாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.