பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மோடி அரசு மீட்கும் – மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் உறுதி

ஜம்மு:
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மகாராஜா குலாப் சிங் சிலையை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் பேசியதாவது:
1987 ஆண்டு நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலில் அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி ஃபரூக் அப்துல்லா மோசடி செய்ததார். இது இறுதியில் பயங்கரவாதம் மற்றும் அடுத்தடுத்த நிகழ்வுகளின் தூண்டுதலாக மாறியது.
மோடி அரசாங்கம் பொறுப்பேற்றதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிப்பது உள்பட மக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து உறுதிமொழிகள் மற்றும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
மக்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டு 370வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது போல, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை விடுவிப்பதற்கான உறுதிமொழியை நரேந்திர மோடி தலைமையிலான 
பாஜக அரசு நிறைவேற்றும்.
ஜம்மு காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சிப் பணிகளைக் கண்காணித்து வரும் பிரதமருக்கு எங்களின் முழு ஆதரவு உண்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.