இஸ்லாமாபாத்-”நாட்டு மக்களின் நலனுக்கானதாக, இந்தியாவின் வெளியுறவு கொள்கை உள்ளது,” என, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது:எப்போதும் தனிப்பட்ட வெளியுறவு கொள்கையை பின்பற்றுவதற்காக இந்தியாவை பாராட்டுகிறேன்.இந்தியா தற்போது அமெரிக்காவுடன் நல்ல நட்புடன் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் அடங்கிய, ‘குவாட்’ அமைப்பிலும் இந்தியா உள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா.,வில் மூன்று தீர்மானங்கள் மீதான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கி இருந்தது.பொருளாதார தடை விதித்துள்ள ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது.
ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை.இதற்கு காரணம் நாட்டு மக்களின் நலனுக்கானதாக இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
இஸ்லாமாபாத்-”நாட்டு மக்களின் நலனுக்கானதாக, இந்தியாவின் வெளியுறவு கொள்கை உள்ளது,” என, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்nsimg2988035nsimg பாகிஸ்தான் பிரதமர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.