பெலகாவி : ”ஆபாச ‘சிடி’ வழக்கில், என் சகோதரர் ரமேஷ் ஜார்கிஹோளிக்கு, ‘கிளீன் சிட்’ கிடைத்துள்ளது. அவர் அமைச்சரவையில் சேரும் வாய்ப்பு அதிகம் உள்ளது,” என கர்நாடகா மில்க் பெடரேஷன் தலைவரும், அவரது சகோதரருமான பாலசந்திர ஜார்கிஹோளி தெரிவித்தார்.பெலகாவியில் அவர் நேற்று கூறியதாவது:
ஏப்ரலில் அமைச்சரவை விஸ்தரிக்கப்படலாம். ஐந்து மாநிலங்களின் தேர்தலுக்கு பின், புதிய முதல்வரை தேர்வு செய்வதில், பா.ஜ., மேலிடம் ஈடுபட்டுள்ளது. அதன்பின் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசிப்பர்.’சிடி’ வழக்கில், என் சகோதரர் ரமேஷ் ஜார்கிஹோளிக்கு, ‘கிளீன் சிட்’ கிடைத்துள்ளது. எனவே அவர், முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையில் சேரும் வாய்ப்பு அதிகம். பெலகாவி மாவட்டத்துக்கு எத்தனை அமைச்சர் பதவி கிடைக்கும் என நான் கூற முடியாது. இது மேலிடம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். முதல்வர், மூத்த தலைவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்போம்.பா.ஜ.,விலிருந்து அவர் வெளியேறுவார், இவர் வெளியேறுவார் என சித்தராமையா வதந்தி பரப்புகிறார். யாரும் கட்சியை விட்டு செல்ல மாட்டார்கள். அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், ம.ஜ.த.,விலிருந்து வந்த 17 எம்.எல்.ஏ.,க்களும், பா.ஜ., சார்பிலேயே போட்டியிடுவர். வதந்தியை பொருட்படுத்த வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement