அரியானாவில் தனியார் பல்கலைக்கழகத்தில் கண்டெடுக்கப்பட்ட 3 கையெறி குண்டுகள் உள்பட 4 வெடிகுண்டுகளை போலீசார் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்தனர்.
அம்பாலா, சண்டகர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் ஒன்றரை கிலோ வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் பாதுகாப்பாக செயலிழிகப்பட்ட நிலையில், திட்டமிட்டு வெடிகுண்டுகள் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி செய்தனரா என மத்திய புலனாய்வு மற்றும் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.