தேங்காய் சேர்க்காமல் சட்னி செய்வது எப்படி என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம் வாருங்கள்.
அது என்ன தேங்காயே இல்லாமல் சட்னி? புதிதாக இருக்கு அல்லவா!
இதை செய்வதற்கு தேவையான பொருட்கள். பொட்டுக்கடலை, பச்சை மிளாகய், கடுகு, கருவேப்பிலை, வெங்காயம் நறுக்கியது, பூண்டு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். செய்முறை எப்படி என்று பார்க்கலாம்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணை ஊற்றி அதில் காரத்திற்கு தேவையான அளவு பச்சை மிளாகயை சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதை வதக்கிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து நாம் ஏற்கனவே வெட்டி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளவும்.
பெரிய வெங்காயமாக இருந்தால் ஒன்று கூட போதும். வெங்காயத்தின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.
சிறு துண்டு மஞ்சள் இரவில் ஊறவைத்து… சுகருக்கு செலவே இல்லாத சூப்பர் தீர்வு!
பின்னர் பூண்டுப்பல் இரண்டை சேர்க்கவும். பின்னர் இவற்றை நன்றாக வதக்கிக் கொள்ளவும், சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு இதை ஆறவிடவும்.
சற்று ஆறிய பிறகு, வதக்கி வைத்திருந்த வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு கலவையை மிக்சி ஜாரில் போட்டுக் கெண்டு தேவையான அளவு பொட்டுக் கடலையை சேர்த்துக் கொள்ளவும்.
இத்துடன், கொஞ்சம் புளி, தேவையான அளவுக்கு உப்பு, கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். அரைவை ஓரளவு இருந்தால் போதும், ரொம்ப அரைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அப்போது தான் பொட்டுக் கடலையின் வழவழுப்புத் தன்மை இல்லாமல் நன்றாக இருக்கும்.
பின்னர் இதை வேறொரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
பிறகு, கடுகுடன் தேவைப்பட்டால் உளுந்து சேர்த்து கருவேப்பிலையும் போட்டு தாளித்துக் கொட்டினால் ருசியான சட்னி ரெடி.
தேங்காய் வாங்கி துருவ வேண்டிய அவசியம் இல்லை. எளிதான வழியில் சுலபமாக இந்தச் சட்னியை உடனடியாக ரெடி செய்துவிடலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“