இம்ரான் கானுக்கு எதிரான தீர்மானம்; மார்ச் 25ல் பாக்.கில் ஓட்டெடுப்பு| Dinamalar

இஸ்லாமாபாத்:“பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வரும் 25ல் ஓட்டெடுப்பு நடத்தப்படும்” என பாகிஸ்தான் பார்லி. சபாநாயகர் ஆசாத் கெய்சர் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் – இ – இன்சாப் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாக்.கில் சமீபகாலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் பார்லிமென்டில் தாக்கல் செய்துள்ளன. இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த 25 எம்.பி.க்களும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இம்ரான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு வரம் 25ல் பார்லியில் நடத்தப்பட உள்ளதாக சபாநாயகர் ஆசாத் கெய்சர் நேற்று அறிவித்துள்ளார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.