லட்சுமி நரசிம்மசாமி கோவிலில்பிரம்ம ரத உற்சவ கொண்டாட்டம்
சித்ரதுர்கா:சித்ரதுர்கா ஹொலல்கரே அருகே உள்ள தேவபுராவில் லட்சுமி நரசிம்மசாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் திருவிழா இம்மாதம் 10ல் துவங்கியது. நேற்று பிரம்ம ரத உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு முக்கிய நிகழ்வான சாமி மாலை ஏலம் விடப்பட்டது. இது 1.80 லட்சம் ரூபாய்க்கு பக்தர் ஒருவர் ஏலம் எடுத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.*படம்: yadgir = பாதயாத்திரை சென்ற பக்தர்கள். இடம்: குர்மித்கல், யாத்கிர்.மாணிக்கேஸ்வரி
மடத்துக்கு பக்தர்கள் பாத யாத்திரை
யாத்கிர்:யாத்கிரின் குர்மித்கலின் காசா மடத்தில் இருந்து 100க்கு மேற்பட்ட பக்தர்கள், யானகுந்தியில் உள்ள மாதா மாணிக்கேஸ்வரி ஆசிரமத்துக்கு பாதயாத்திரை சென்றனர்.மாதா மாணிக்கேஸ்வரி நினைவு தினத்தை முன்னிட்டு பாதயாத்திரை நடத்தப்பட்டது. வழிநெடுகிலும் பக்தர்களுக்கு பொதுமக்கள் மோர், வாழைப்பழம் கொடுத்தனர். பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என கூறியபடி சென்றனர்.
இடம்: தர்மபுரா, சாம்ராஜ்நகர்.
தேர்த் திருவிழா
உருஸ் விழாசாம்ராஜ்நகர்:சாம்ராஜ்நகரின் ஹுன்சூர் அருகே உள்ள தர்மாபுராவில் ஆஞ்சநேயர் கோவில் தேர்த்திருவிழா, பல்லக்கு உற்சவம், ஜமால் பீபீ மகா சாகேப் உருஸ் எனப்படும் கங்கோத்சவா ஆண்டு தோறும் மார்ச்சில் நடப்பது வழக்கம். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையிலான இந்த திருவிழா இம்மாதம் 18ல் துவங்கியது. இன்று நிறைவடைகிறது.
சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராமத்தினர் பங்கேற்றனர்.*பால் விலையை உயர்த்தஉற்பத்தியாளர்கள் வற்புறுத்தல்ஷிவமொகா:ஷிவமொகா பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதனால் பால் கூட்டமைப்பு, கொள்முதல் விலையை 2.50 ரூபாய் உயர்த்தி உத்தரவிட்டது. ஆனால் தீவனம் விலை அதிகரித்துள்ளதால் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தபட்சம் 30 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இல்லையென்றால் வரும் 23ல் கே.எம்.எப்., அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கமிட்டியினர் எச்சரித்துள்ளனர்.*ஓய்வு பெற்ற 3 நாளில்டாக்டர் திடீர் மரணம்மைசூரு:சாம்ராஜ்நகர் ஆயுஷ் இலாகா மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ராச்சய்யா, 60. சாம்ராஜ்நகரில் கொரோனா வார்டில் பணியாற்றி வந்த இவர் இம்மாதம் 17ல் ஓய்வு பெற்றார்.ஓய்வுபெற்ற நாளிலேயே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் மைசூரு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். ஓய்வு பெற்ற மூன்று நாட்களிலேயே ஆயுஷ் டாக்டர் உயிரிழந்தது, அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Advertisement