காங்கிரஸ் கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டு வரும் தலைவர்கள் ஜி-23 என அழைக்கப்படுகிறார்கள். ஜி-23-ல் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் கூறுகையில் ‘‘பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகளும்தான் ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்றதற்கு பொறுப்பு. தி காஷ்மீரு் ஃபைல்ஸ் என்ற பாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படம் 1990-ம் ஆண்டு காஷ்மீர் பண்டிட்ஸ் வெளியேற்றப்பட்டது குறித்து எடுக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும்போது அவ்வாறு தெரிவித்தார்.
மகாத்மா கா்நதி மிகப்பெரிய இந்து மற்றும் மதச்சார்பின்மைவாதி என்பதை நான் நம்புகிறேன். ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற அனைத்திற்கும் பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாதிகள் பொறுப்பேற்க வேண்டும். இந்துக்கள், காஷ்மீர் பண்டிட்ஸ், காஷ்மீர் முஸ்லீம், டோக்ராஸ் என அனைவரையும் அது பாதித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மக்களிடம் 24×7 என்ற அடிப்படையில் மதம், சாதி, மற்றும சிலவற்றின் மூலம் பிளவை ஏற்படுத்துகின்றன. என்னுடைய காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சியையும் மன்னிப்பதில்லை. சிவில் சமூகம் ஒன்றாக இருக்க வேணடும். சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்’’ என்றார்.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்… பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மோடி அரசு மீட்கும் – மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் உறுதி