`Miss India -வில் வெளியேற்றம் டு Pan India ஹீரோயின்' `Halamathi habibi' பூஜா ஹெக்டேயின் பயணம்!

2012 -ல் தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த ‘முகமூடி’ படம் தான் பூஜா ஹெக்டேவின் முதல் படம். 2022-ல் ‘பீஸ்ட்’ மோட். பூஜாவின் 10 வருட சினிமா பயணம் ஒரு சின்ன rewind.

2009 Miss India போட்டியில் முதல் ரவுண்டிலேயே வெளியேற்றம். 2010 Miss Universe India போட்டியில் இரண்டாவது ரன்னர் அப். பூஜாவின் புகைப்படங்களைப் பார்த்து விட்டு மிஷ்கின் நடிக்க வைத்த படம் ‘முகமூடி’.

2014-ல் தெலுங்கில் முதல் படம் ‘Oka Laila Kosam’. நாக சைதன்யா உடன் நடித்தார். தமிழ், தெலுங்கு தெரியாதபோதும் அந்த மொழிகளில் பேசி நடித்தார்.

இரண்டாவது தெலுங்கு படம் 2014 -ல் வருண் தேஜுடன் நடித்த ‘Mukunda’. இந்தப் படம்தான் பூஜாவிற்கு இண்டஸ்ட்ரியில் பெயர் வாங்கிக் கொடுத்தது.

2014 -ல் இந்தி முதல் படம் ஒப்பந்தமாகிறார். ஹ்ரித்திக் ரோஷன் உடன் ‘Mohenjo Daro’. பட்ஜெட் பெரிது. இந்தப் படத்தின் வெளியீட்டுக்காக வேறு எதையும் கமிட் செய்யவில்லை. 2016ல் படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தது.

2017ல் மீண்டும் தெலுங்குக்கே திரும்புகிறார். அல்லு அர்ஜுன் உடன் ‘DJ’. படம் நான்கு மொழிகளில் டப் செய்யப்பட்டது.

2018ல் ஒரே ஆண்டில் மூன்று படங்கள். ஜூனியர் என்.டி.ஆர். உடன் ஒரு படம், Bellamkonda Sreenivas உடன் ஒரு படம், ராம் சரணின் ‘ரங்கஸ்தலம்’ படத்தில் ‘Jigelu Rani’ பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.

2019-ல் அதே போல மூன்று படங்கள். மகேஷ் பாபு உடன் ‘Maharshi’, ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு வெர்சன் ‘Gaddalakonda Ganesh’, ஹிந்தியில் அக்ஷய் குமார் உடன் ‘Housefull 4’.

2020 -ல் அல்லு அர்ஜுடன் நடித்த ‘Ala Vaikunthapurramuloo’ மிகப்பெரிய வெற்றி. 250 கோடிக்கு மேல் வசூல். பூஜாவின் நடிப்பும் லுக்கும் பெரியளவிற்கு பேசப்பட்டது.

2021 இல் Most Eligible Bachelor படம். அகில் அகினேனி ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் பூஜா நடித்தார்.

Pan India அளவிலான படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன பூஜாவுக்கு. இந்த வருடத்தை ‘ராதே ஷ்யாம்’ உடன் ஆரம்பித்திருக்கிறார்.

பிரபாஸ் உடன் நடித்திருந்த ‘ராதே ஷ்யாம்’ பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருப்பினும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ‘ஒவ்வொரு படத்திற்கும் ஒரு விதி இருக்கும்’ என மெச்சூர்ட் ஆக பதிலளிக்கிறார் பூஜா ஹெக்டே.

பூஜா ஹெக்டே

ஹ்ரித்திக் படத்திற்கு காத்திருந்த வேளையில் மணிரத்னம் படத்திற்கு வந்த வாய்ப்பைத் தவறவிட்டார். 2012க்கு பிறகு இப்போது ‘பீஸ்ட்’ வழியாக தமிழுக்கு வருகிறார் பூஜா ஹெக்டே. Welcome Back Pooja!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.