உக்ரைன் மீது கடந்த 24-ந்தேதி ரஷியா தாக்குதலை தொடங்கிறது. கிரிமியாவை தன்னுடன் இணைக்க ரஷியா தாக்குதல் நடத்தியதுபோல், இதுவும் எளிதாக முடியவடையும் என ரஷியா மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தாக்குதல் நீண்டு கொண்டே செல்கிறது.
ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக தடைகளை விதித்துள்ளதால், ரஷியாவில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனிடையே உக்ரைன் மீதாக தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியாவில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் அவர்களை கைது செய்து போராட்டத்தை ஒடுக்கி வருகின்றன. இன்று போராட்டத்தில் ஈடுபட்ட 936 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து தற்போது வரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.