மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அப்போலோ வழக்கால் சுமார் இரண்டு ஆண்டுகாலம் முடக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, மீண்டும் விசாரணை தொடங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் நடைபெற்று வரும் விசாரணையில், சில அப்போலோ மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அதைத் தொடர்ந்து, ஓபிஎஸ், இளவரசி ஆகியோர் மார்ச் 21ந்தேதி ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.
அதன்படி, இன்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆஜரானார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று பிற்பகல் ஓபிஎஸ் ஆஜராவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கனவே பலமுறை அவருக்கு சம்மமன் அனுப்பிய நிலையில், அவர் ஆஜராகாத நிலையில், இன்று ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறுமுகசாமி ஆணையத்தில் 2வது நாளாக அப்போலோ மருத்துவர் ஆஜர்! ஓபிஎஸ், இளவரசி ஆஜராக சம்மன்….