டெல்லி-தோஹா விமானம் QR579 கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது

டெல்லியில் இருந்து தோஹா சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் QR579 பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தின் சரக்குகள் வைக்கப்படும் பகுதியில் இருந்து புகை வந்ததை அடுத்து விமானம் பாகிஸ்தானுக்கு திருப்பி விடப்பட்டது. அந்த வழித்தடத்தில் கத்தார் ஏர்வேஸ் ஏர்பஸ் ஏ350 விமானத்தை இயக்கியது.

விமானம் QR579 தில்லியில் இருந்து  திட்டமிடப்பட்ட படி, அதிகாலை 3.50 மணிக்குப்  புறப்பட்ட நிலையில், சுமார் 1.15 மணி நேரத்திற்குப் பிறகு 5.45 AM மணிக்கு பாகிஸ்தான் கராச்சியில் தரையிறங்கியது என விமான கண்காணிப்பு இணையதளமான Flighaware வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. விமானம் தோஹா சர்வதேச விமான நிலையத்தில் காலை 7.15 மணிக்கு தரையிறங்குவதாக இருந்தது.

“கத்தார் ஏர்வேஸ் விமானம் QR579 டெல்லியில் இருந்து தோஹாவிற்கு மார்ச் 21 அன்று கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டது. சரக்குகள் வைக்கும் பகுதியில் புகை கண்டறியப்பட்டதன் காரணமாக அவசரநிலையை அறிவித்து கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. விமானம் கராச்சியில் பாதுகாப்பாக தரையிறங்கியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டன. ,” என்று கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | எனது ‘நண்பர்’ மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறேன்: இஸ்ரேல் பிரதமர்

“சம்பவம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. தோஹாவிற்கு பயணிகளை ஏற்றிச் செல்ல, மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகளுக்கு  சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்,” என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் சியால்கோட் ராணுவ தளத்தில் மிகப்பெரிய வெடிகுண்டு வெடிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.