டெல்லி: பணம் வைத்து சூதாடும் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்ற மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தினார். அண்மைக்காலமாக ஏராளமான ஆன்லைன் விளையாட்டு இணையதளங்கள் முளைத்துக் கொண்டிருக்கின்றது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு பலரும் அடிமையாகும் போக்கும் அதிகரித்து வருகிறது என திருச்சி சிவா எம்.பி. தெரிவித்தார்.