இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெவ்வேறு காலக்கட்டத்தில் கடத்திச் செல்லப்பட்ட சுவாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால பொருட்களை ஆஸ்திரேலிய அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அவற்றை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சிவ பெருமான், சக்தி, விஷ்ணு மற்றும் ஜெயின் மத பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் பொருட்கள் உள்ளிட்ட 29 பழங்கால பொருட்களை பிரதமர் ஆய்வு செய்தார். இவை அனைத்தும் தமிழகம், தெலங்கானா, ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.