சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால் 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜிலின் நகரத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நகரத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சீனா தெரிவித்துள்ளது.
இதையடுத்து மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.