ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆட்டம் போட்ட ஆமிர் கான்… தீயாய் பரவும் வீடியோ!

எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த எம்எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை லைகா புரடெக்ஷன்ஸ், பென் இந்தியா லிமிடெட், தமீன்ஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.

கடந்த ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கொரோனாவால் தள்ளிப்போனது.

வேற லெவலில் ஹோலி கொண்டாடிய பிரபல இயக்குநரின் மாஜி மனைவி!

இந்நிலையில் ஒருவழியாக வரும் 25ஆம் தேதி ஆர்ஆர்ஆர் படம் தமிழ் தெலுங்கு, மலையாளம் கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆகிறது. இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் படக்குழு கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் படக்குழு நேற்று டெல்லியில் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றது. படத்தின் இயக்குநரான எஸ்எஸ் ராஜமவுலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் மற்றும் ஆலியா பட் ஆகியோர் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஆமிர்கானும் பங்கேற்றார்.

அடங்காத அமலா பால்… கையில் சரக்குடன் ‘பப்பில்’ கெட்ட ஆட்டம்… தீயாய் பரவும் வீடியோ!

இதில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோருடன் இணைந்து நடனமாடினார் நடிகர்
ஆமிர் கான்
. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்தப் பாடல் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி பெரும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

எனக்கு நம்பிக்கையே இல்ல..என் மனச மாத்தீட்டாங்க – மதன் கார்க்கி Open Talk!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.