மலிவு விலையில் எலக்ட்ரிக் கார்.. மாபெரும் முதலீட்டுடன் களமிறங்கியது மாருதி சுசூகி..!

இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்துக் கார் மற்றும் பைக் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பை மேம்படுத்த அதிகப்படியான முதலீட்டை செய்து வருகிறது.

ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இணையாக எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்கப் பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.

இவ்வளவு பலன் இருக்கா.. பிக்சட் டெபாசிட் செய்ய இது சரியான தருணம்..!

இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி எவ்விதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில் தற்போது முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 மாருதி சுசூகி

மாருதி சுசூகி

மாருதி சுசூகியின் தாய் நிறுவனமான சுசூகி மோட்டார் கார்ப் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் மற்றும் பேட்டரி தயாரிப்புக்காகச் சுமார் 10,440 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை குஜராத்தில் செய்ய முடிவு செய்த அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10,440 கோடி ரூபாய் முதலீடு

10,440 கோடி ரூபாய் முதலீடு

இதில் சுசூகி மோட்டாரின் குஜராத் தொழிற்சாலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதற்காக 2025ஆம் ஆண்டுக்குள் சுமார் 3,100 கோடி ரூபாயும், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்கச் சுமார் 7300 கோடி ரூபாய் தொகையை 2026ஆம் ஆண்டுக்குள் முதலீடு செய்யச் சுசூகி மோட்டோ கார்ப் முடிவு செய்துள்ளது.

 வாகன ஸ்கிராப் தளம்
 

வாகன ஸ்கிராப் தளம்

மேலும் திட்டமிட்டப்பட்ட 10,440 கோடி ரூபாயில் மீதமுள்ள 40 கோடி ரூபாய் தொகையை மாருதி சுசூகி Toyotsu மூலம் புதிய vehicle recycling plant அமைக்க முடிவு செய்யுப்பட்டு உள்ளது. இந்தத் தொழிற்சாலை 2025ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பான் அரசு

ஜப்பான் அரசு

இந்தியாவில் ஜப்பான் அரசு சுமார் 42 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்ய உறுதி அளித்துள்ள நிலையில், இதில் ஒரு பகுதியாக ஜப்பான் நாட்டின் சுசூகி நிறுவனம் சுமார் 1.3 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸ்

டாடா மோட்டார்ஸ்

சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதலீட்டின் வாயிலாக இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையிலும் முன்னோடியாக விளங்க உள்ளது. மாருதி சுசூகி டாடா மோட்டார்ஸ்-ன் 1 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்திற்குப் போட்டியாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 மாருதி சுசூகி ஸ்பெஷல்

மாருதி சுசூகி ஸ்பெஷல்

மேலும் இந்தியாவிலேயே குறைவான விலையிலும், அதேநேரத்தில் முன்னணி நிறுவனங்களுக்குக் கிட்டத்தட்ட இணையான தரத்தில் கார்களைத் தயாரித்து விற்பனை செய்வதில் முன்னோடியாக இருக்கும் மாருதி சுசூகி, எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Maruti Suzuki parent Suzuki to invest ₹10,440 crore for biggest electric vehicle plan

Maruti Suzuki parent Suzuki to invest ₹10,440 crore for biggest electric vehicle plan மலிவு விலையில் எலக்ட்ரிக் கார்.. மாபெரும் முதலீட்டுடன் களமிறங்கியது மாருதி சுசுகி..!

Story first published: Monday, March 21, 2022, 15:28 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.