அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக நீதிபதியாக ஒரு கறுப்பின பெண்!

வாஷிங்டன்,
அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக கறுப்பின பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்றக உள்ளார். முன்னதாக கறுப்பின பெண்ணான கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்பவரை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தார். 
அவருடைய இந்த ஒப்புதலுக்கு பின்னர் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் தான் அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்நிலையில், கறுப்பின பெண்ணை நீதிபதியாக நியமிக்க இன்று வாக்கெடுப்பு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க செனட், ஜனநாயகக் கட்சியினருக்கும் குடியரசுக் கட்சியினருக்கும் இடையே 50-50 என சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜாக்சனை நீதிபதியாக நியமிக்க தொடக்கத்திலிருந்தே ஜனநாயகக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 
பைடன் தனது தேர்தல் வாக்குறுதியின் போது, கறுப்பின ஆப்ரிக்க அமெரிக்கரை நீதிபதியாக நியமிக்கலாம் என்று கூறியதை ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.  94 சதவீதம் வெள்ளை அமெரிக்கர்களுக்கு மத்தியில், 6 சதவீதம் மட்டுமே இருக்கும் கறுப்பின ஆப்ரிக்கரை நீதிபதியாக நியமிப்பதா என்று அவர்கள் விமர்சித்தனர். இதனால் அவர்களுடைய வாக்கு ஜாக்சனுக்கு எதிராகவே இருக்கும்.
மீதமிருக்கும் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து, அவருக்கு ஆதரவாக வாக்களித்தால், துணை அதிபர் கமலா ஹாரிசின் வாக்கையும் சேர்த்து கணக்கில் கொண்டால், அப்போது ஜாக்சன் நீதிபதியாக செனட் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்.  
தற்போது 51 வயதாகும் கேடான்ஜி பிரவுன் ஜாக்சன், ஓய்வு பெறப்போகும் 83 வயது நீதிபதி ஸ்டீபன் பிரேயர் என்பவருக்கு பதிலாக களமிறக்கப்பட்டுள்ளார்.
ஜாக்சன் சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் மூன்றாவது ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஆவார்.ஆனால் முதல் கறுப்பினப் பெண். 
கறுப்பினத்தவர்களில் முதன்முறையாக துர்குட் மார்ஷல் என்பவர் 1967 முதல் 1991 வரை அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றினார். அவரை தொடர்ந்து கிளேரன்ஸ் தாமஸ் பதவி வகித்தார். 
இப்போது, சுப்ரீம் கோர்ட்டில் பணியாற்றும் மூன்றாவது கறுப்பினத்தவராக அதிபர் பைடனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் பொறுப்பேற்பார் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.