ரஷ்யா — உக்ரைன் மோதலுக்கு இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்து வருகின்றது.
இதற்கிடையில் ரஷ்யா மீது பல நாடுகளும் பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன. சில நிறுவனங்கள் ரஷ்ய நிறுவனங்கள் உடனான வணிகத்தினையும் முறித்துக் கொண்டுள்ளன.
இதற்கிடையில் ரஷ்யா – உக்ரைன் போர் இன்னும் முடிவடையாமல் தொடர்வதால், ஏற்றுமதியாளர்கள் ரஷ்யா மற்றும் காமன் வெல்த் நாடுகளுக்கு தங்களது சரக்குகளை அனுப்ப மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
எல்ஐசி ஐபிஓ மே மாதத்திற்கு ஒத்திவைப்பு..? ரஷ்யா – உக்ரைன் போரால் மொத்த கதையும் மாறியது..!

ரஷ்யாவில் வணிகமா?
இதற்கிடையில் பல நிறுவனங்கள் இப்போது ரஷ்யாவில் தங்களது வணிகங்களை மறுபரிசீலனை செய்து வருகின்றன. மேலும் சில நிறுவனங்கள் தங்களது வணிகங்களை கட்டுப்படுத்தியுள்ளன. சில அண்டை நாட்டு நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்தியும் வருகின்றன. சில நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை நிறுத்த முடிவு செய்துள்ளன.

3 வழிகள்
ரஷ்யா, காமன் வெல்த் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 3 வழிகளை மாற்றாக ஆராய்ந்து வரும் ஏற்றுமதியாளர்கள், முதலாவதாக சீனா வழியாக கிங்டாவோ துறைமுகத்தையும், இரண்டாவது சர்வதேச வடக்கு – தெற்கு போக்குவரத்து (INSTC) வழியாக ஈரான் மற்றும் அஜர்பைஜான் வழியாக மும்பையில் இருந்து மாஸ்கோவை இணைக்கிறது. மூன்றாவது ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க்கில் இருந்து, ஜார்ஜியாவில் உள்ள போட்டி துறைமுகத்திற்கு சரக்குகளை கொண்டு செல்வதற்கான மற்றொரு வழியாக ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எதற்காக மாற்று வழி?
தற்போது உலகளாவிய கப்பல் நிறுவனங்கள் கருங்கடல் வழியாக ரஷ்யாவுக்கு சரக்குகளை கொண்டு செல்லவில்லை. மேலும் போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இயல்பு நிலை ஏற்பட்டாலும் கூட, உடனடியாக அந்த வழியினை பயன்படுத்த முடியாது. ஆக இந்தியாவில் இருந்து மாற்று வழியினை ஆராய்வதற்கு இதுவும் ஒரு காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

CIS நாடுகள் எது?
CIS நாடுகளில் அஜர்பைனான், ஆர்மீனியா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
ஏற்றுமதியாளர்கள் பெரும்பாலும் INSTC வழியினையே பயன்படுத்த விரும்புகின்றனர். ஏனெனில் இந்த பன்னாட்டு வர்த்தக வழித்தடம் இந்தியாவால் உருவாக்கப்பட்டது. இது தவிர ஏற்றுமதியாளர்களும் ஹம்பர்க் மூலம் பொருட்களை அனுப்ப தயாராக உள்ளனர்.

சீனா வழியாக வேண்டாம்?
சீனா வழியாக பொருட்களை அனுப்புவதற்கான விருப்பம் இருந்தாலும், இதில் அதிக போக்குவரத்து நிலவி வருகின்றது. மேலும் இந்த பகுதியில் சீனாவின் சரக்கு கப்பல்களுக்கே முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. அதோடு இது அதிக நேரம் எடுக்கும் ஒரு பாதையாகவும் பார்க்கப்படுகிறது. ஆக INSTC என்பது நேரம் குறைவான, அதே சமயம் செலவு குறைவான ஒரு பாதையாக பார்க்கப்படுகிறது.
russia – ukraine war:Exporters looking for an alternative route
russia – ukraine war:Exporters looking for an alternative route/மாற்று வழியினை தேடும் ஏற்றுமதியாளர்கள்.. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையால் நெருக்கடியே..!