தமிழ்நாடு எப்போதுமே கெத்து தான்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்..!

வங்கி சேவையில் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ள ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் வங்கிகள் ஒருப்பக்கம் தனது வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான பணப் பரிமாற்றம் மற்றும் பணப் புழக்க சேவைகளை அளித்தாலும், மறுபுறம் வாடிக்கையாளர்களிடம் இருந்து அதிகளவிலான வருமானத்தையும் பெற்று வருகிறது.

மேலும் வங்கிகள் பொதுவாக டிமாண்ட், பணப் பரிமாற்ற அளவீடு, ஏடிஎம் இயந்திரத்தின் பயன்பாடு ஆகிய பல காரணிகளை அடிப்படையாக வைத்து தான் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை வைக்கும். இதன் மூலம் ஒரு நகரம் அல்லது மாநிலத்தில் நிறுவப்பட்டு உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் எண்ணிக்கை அடிப்படையில் தத்தம் மாநிலத்தில் நிதி சேவையின் ஆதிக்கத்தையும் எளிதாகக் கணிக்க முடியும்.

மாற்று வழியினை தேடும் ஏற்றுமதியாளர்கள்.. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனையால் நெருக்கடியே..!

ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்

ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்

இந்திய ரிசர்வ் வங்கி டிசம்பர் 2021 முடிவில் எடுத்த கணக்கின் படி இந்தியாவிலேயே அதிகப்படியான ஏடிஎம்கள் இருக்கும் மாநிலமாகத் தமிழ்நாடு விளங்குகிறது. தமிழ்நாட்டில் தனியார் வங்கிகள், பொதுத்துறை வங்கி, வொயிட் லேபிள் ஏடிஎம் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் இணைந்து மொத்தம் 28,540 ஏடிஎம் இயந்திரங்களை நிறுவியுள்ளது மட்டும் அல்லாமல் அனைத்தும் பயன்பாட்டில் உள்ளது.

தமிழ்நாடு முதல் இடம்

தமிழ்நாடு முதல் இடம்

அதிக ஏடிஎம் இயந்திரங்கள் கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்த நிலையில் 2வது இடத்தை இந்தியாவின் வர்த்தகத் தலைநகரம் எனப் பெருமையுடன் விளங்கும் மகாராஷ்டிரா பெற்று உள்ளது. மகாராஷ்டிராவில் 27,945 ஏடிஎம் இயந்திரங்களும், உத்தரப் பிரதேசத்தில் 23,640 இயந்திரங்கள் உடன் 2வது மற்றும் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள்
 

பொதுத்துறை வங்கிகள்

தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகள் மட்டும் சுமார் 13,089 ஏடிஎம்-களை வைத்துள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவில் 1,39,002 கிட்டதட்ட 10 சதவீத ஏடிஎம்கள் தமிழ்நாட்டில் உள்ளது.

பேங்க் ஆஃ பரோடா – 568

பேங்க் ஆஃப் இந்தியா – 251

மகாராஷ்டிரா வங்கி – 30

கனரா வங்கி – 2220

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா – 115

இந்தியன் வங்கி – 1889

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 1451

பஞ்சாப் மற்றும் சிண்ட் வங்கி – 14

பஞ்சாப் தேசிய வங்கி – 362

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா – 5273

யூகோ வங்கி – 89

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா – 827

தனியார் வங்கிகள்

தனியார் வங்கிகள்

தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகள் சுமார் 10,331 ஏடிஎம்-களை வைத்துள்ளது. மொத்தமாக இந்தியாவில் 74,748 ஏடிஎம்கள் உள்ளது

ஆக்சிஸ் பேங்க் லிமிடெட் – 1779

பந்தன் வங்கி லிமிடெட் – 18

சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் – 1311

CSB வங்கி லிமிடெட் – 93

DCB வங்கி லிமிடெட் – 12

தனலக்ஷ்மி வங்கி லிமிடெட் – 37

பெடரல் வங்கி லிமிடெட் – 179

HDFC வங்கி லிமிடெட். – 1545

ஐசிஐசிஐ வங்கி லிமிடெட் – 1888

ஐடிபிஐ வங்கி லிமிடெட் – 231

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட் – 50

இண்டூசிண்ட் வங்கி லிமிடெட் – 233

ஜம்மு & காஷ்மீர் வங்கி லிமிடெட் – 5

கர்நாடகா வங்கி லிமிடெட் – 63

கரூர் வைஸ்யா வங்கி லிமிடெட் – 1497

கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட். – 154

RBL வங்கி லிமிடெட் – 33

சவுத் இந்தியன் வங்கி லிமிடெட் – 209

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட் – 948

யெஸ் பேங்க் லிமிடெட். – 46

வெளிநாட்டு வங்கிகள்

வெளிநாட்டு வங்கிகள்

இந்தியாவில் இயங்கி வரும் வெளிநாட்டு வங்கிகள் தமிழ்நாட்டில் சுமார் 653 ஏடிஎம்களை வைத்துள்ளது. வெளிநாட்டு வங்கிகள் மொத்தமாகவே இந்தியாவில் 1795 ஏடிஎம்களை மட்டுமே வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிட்டிபேங்க் என்.ஏ – 41

டிபிஎஸ் வங்கி இந்தியா லிமிடெட் – 582

Deutsche பேங்க் ஏஜி – 3

தோஹா வங்கி – 1

HSBC லிமிடெட் – 8

கேப் ஹனா வங்கி – 1

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி” – 17

ஸ்மால் பைனான்ஸ் பிரிவு

ஸ்மால் பைனான்ஸ் பிரிவு

இப்பிரிவில் இருக்கும் வங்கிகள் தமிழ்நாட்டில் 261 ஏடிஎம்-களை வைத்துள்ளது.

ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் – 119

ESAF ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் – 46

ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் – 26

ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் – 7

உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் – 61

உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் லிமிடெட் – 2

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tamilnadu have highest number of banks in India, follows Maharashtra, Uttar pradesh

Tamilnadu have the highest number of banks in India, follows Maharashtra, Uttar pradesh தமிழ்நாடு எப்போதுமே கெத்து தான்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி ரிப்போர்ட்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.