திருச்சி,
மாநில அளவிலான சிலம்ப போட்டி இன்று திருச்சியில் நடந்தது. இதில் குழு மற்றும் ஓபன் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகளின் முடிவில் திருச்சி சுருளி ஆண்டவர் தற்காப்பு கலைக்கூடத்தை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் மொத்தம் 30 பதக்கங்களை வென்று முதலிடத்தை பிடித்தனர்.
இதில் இளஞ்சீரியன், சரனேஷ், கார்த்திகேயன், ராகுல், சுமித்ரா, வினோதீபா, சஞ்சனா, லட்சிதா, ஸ்ரீமன்ஹரி, கஜபிரியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
ஆகாஷ், அகேஸ்வரன், கிசான், பிரவீன், பிரசன்னா, கிருத்திக் ரோஷன், பிரதீதா, சகானா, யுவனிகா, ஷாலினி ஆகியோர் வெள்ளிப்பதக்கத்தை பெற்றனர். பாண்டி மீனா, கதிர்வேல், அனுஷ்கா, சரவணன், எஸ்வந்திகா, சஞ்சய், சஞ்சித், ஹரி பிரசாத், ரித்தீஷ் மற்றும் ஜாய்ஸ்லி ஆகியோர் வெண்கலப்பதக்கத்தை பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நவல்பட்டு போலீஸ் பயிற்சி பள்ளி கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை சிலம்ப பயிற்சியாளர்கள் முத்துராமலிங்கம், அரவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.