புதுடெல்லி:
நாட்டுக்காக மேலும் பணியாற்ற பத்ம பூஷன் எனக்கு ஊக்கமளிக்கிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா ராஷ்டிரபதி பவனில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் 2 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 54 பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். மூத்த காங்கிரஸ் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்மந்திரியுமான குலாம் நபி ஆசாத் பத்ம பூஷன் விருதை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டார். மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்த பத்ம விபூஷன் விருதை பிபின் ராவத்தின் மகள்கள் ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
இந்த விருதை பெற்றது குறித்து பேசிய குலாம் நபி ஆசாத், நாட்டுக்காக மேலும் பணியாற்ற பத்ம பூஷன் எனக்கு ஊக்கமளிக்கிறது என்று தெரிவித்தார்.