டெல்லியில் இருந்து கத்தார் தலைநகர் தோஹா நோக்கி சுமார் 100 பயணிகளுடன் புறப்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
QR579 என்ற எண் கொண்ட அந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை வைக்கும் பகுதியில் இருந்து புகை வெளியாவது கண்டறியப்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், பயணிகள் தோஹா சென்றடைய மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.