சென்னை:
1,000 ரேஷன் கார்டுகள் உள்ள நியாய நிலை கடைகள் பிரிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவகாரம் நடைபெற்று வருகிறது. அப்போது திருப்பூரில் நியாயவிலைக் கடைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் செயல் குறிப்பு அரசிடம் இருக்கிறதா? என செல்வராஜ் எம்எல்ஏ கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் கூறிய அமைச்சர் ஐ பெரியசாமி, திருப்பூரில் 30 நியாயவிலை கடைகள் இயங்கி வருகிறது.
திருப்பூரில் 3 முழு நேர கடைகள் மற்றும் 7 பகுதி நேரக் கடைகள் திமுக ஆட்சி அமைத்த பின் தொடங்கப்பட்டு இருப்பதாகவும், அதிக குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளை பிரித்து புதிய ரேஷன் கடைகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் உள்ள கடைகளை பிரிக்க அரசு தயாராக உள்ளது. 150 ரேஷன் கார்டுக்கு பகுதிநேர கடைகளும், 200 ரேஷன் கார்டுக்கு மேல் இருந்தால் முழு நேரக் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.