மஹர பிரதேச சபையின் நான்கு மாடி பல்நோக்கு கட்டிடம் இன்று (21) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
பிரித் பாராயணத்திற்கு மத்தியில் நினைவு பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், அதனை தொடர்ந்து கட்டிடத்தை திறந்துவைத்த கௌரவ பிரதமர் வாழ்த்துக் குறிப்பு ஒன்றையும் முன்வைத்தார்.
தன்போது மஹர பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஏ.சுதீமா சாந்தனி கௌரவ பிரதமருக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார்.
108 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பல்நோக்குக் கட்டிடமானது பிரதேச சபைத் தலைமை அலுவலகம், நூலகம், ஆயுர்வேத நிலையம் மற்றும் ஏனைய பிரதேச சபை நிர்வாக அலகுகளைக் கொண்டுள்ளது.
மஹர நெலிகம ஸ்ரீ ஷைலாசன்னாராமாதிபதி வணக்கத்திற்குரிய மாகுரே பியநந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர் பங்கேற்றிருந்தனர்.
மேலும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் விதான, மஹர பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஏ.சுதீடிமா சாந்தனி, உப தவிசாளர் அஜந்த விக்கிரமாராச்சி மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள், மேயர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என பலரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு