லண்டன் : லண்டன் பல்கலையில் படித்த இந்திய வம்சாவளி மாணவி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, துனிசியா நாட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான சபிதா தன்வானி, 19, லண்டன் பல்கலையில் படித்தார். அங்குள்ள ஆர்பர் ஹவுஸ் மாணவியர் விடுதியில் தங்கியிருந்தார்.கடந்த 19ம் தேதி, கழுத்தில் பலத்த காயங்களுடன், அவர் அறையில் இறந்து கிடந்தார். விசாரணை நடத்திய ‘ஸ்காட்லாண்ட் யார்டு’ போலீசார், வட ஆப்ரிக்க நாடான துனிசியாவை சேர்ந்த மஹெர் மாரூப், 22, என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.
இது குறித்து, போலீசார் கூறியதாவது:சபிதாவும் மஹெரும் நெருங்கிப் பழகியுள்ளனர்.ஆனால், மஹெர் மாணவர் அல்ல. சபிதா கொலையாவதற்கு முதல் நாள், மஹெர் அவரது அறையில் தங்கியிருந்தார் என்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீவிர விசாரணை நடந்து வருகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
லண்டன் : லண்டன் பல்கலையில் படித்த இந்திய வம்சாவளி மாணவி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, துனிசியா நாட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.